×

ரம்யா பாண்டியனுக்கு டும்..டும்..டும்..! மாப்பிள்ளை யார் தெரியுமா? 

 

நடிகை ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரை திருமணம் செய்ய இருப்பதாகவும், இவர்களின் திருமணம் ரிஷிகேஷில், கங்கை நதி அருகே நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்வின் மூலம் பிரபலமானவர் என்பதும் தெரிந்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன.

இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டர் தவான் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும், இந்த திருமணம் ரிஷிகேசில், நவம்பர் 8ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி வரவேற்பு நடக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா டிரெயினிங் சென்டர் ஒன்றில் யோகா பயிற்சிக்கு ரம்யா பாண்டியன் சேர்ந்தபோது, அங்கு பணிபுரியும் யோகா டீச்சருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து இரு தரப்பினரும் கலந்து பேசி இந்த திருமணத்தை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.