வேட்டையன் படத்தில் நட்ராஜ்-ஆக ராணா டகுபதி.. வீடியோ வெளியீடு
Sep 19, 2024, 12:35 IST
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாடலைத் தொடர்ந்து படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோ மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வேட்டையன் படத்தில் ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். null