×

பள்ளி மாணவர்களின் கதையை பேசும் ‘ரங்கோலி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

பள்ளி மாணவர்களின் கதையை வைத்து உருவாகியுள்ள ‘ரங்கோலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இயக்குனர் விஜய்யின் சகோதரி மகன் ஹமரேஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘ரங்கோலி’. இந்த படத்தில் பிரார்த்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பள்ளி மாணவர்களின் கதையை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார். 

பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் அரசு பள்ளியில் நடிக்கும் மாணவர் ஒருவர் சில காரணங்களால் பணக்கார மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்கிறார். அப்போது புதிய பள்ளியில் சக மாணவர்களுடன் சண்டை மற்றும் காதல் குறித்து பேசும் படம்தான் இந்த படம். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.