☰
×

"என்னிடம் அவர் 100 முறையாவது இப்படி கேட்க வேண்டும்"-ராஷ்மிகாவிடம் கூறிய விஜய் தேவரகொண்டா

 

காதல் திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்து நடித்த ‘ரணபாலி’ என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இது ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திர ஜோடி, தங்கள் காதல் மற்றும் திருமணம் குறித்த விஷயங்களை பகிர்ந்தனர். திருமணம் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறுகையில், ‘நாம் உடனடியாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று, ஒரு வருடத்துக்கு மேல் விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவர் சம்மதம் என்று சொல்வதற்காக, ஒரு வருடம் வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது’ என்றார்.

பிறகு பேசிய விஜய் தேவரகொண்டா, ‘ராஷ்மிகா சொன்னது உண்மைதான். நாங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு, என்னிடம் அவர் 100 முறையாவது இப்படி கேட்க வேண்டும், கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று, அவரிடம் நான் நிபந்தனை விதித்திருந்தேன்’ என்று, ராஷ்மிகா மந்தனாவை பார்த்து ஜாலியாக கண் சிமிட்டினார்.