☰
×

"விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்த பிறகு..."ராஷ்மிகா சொன்ன தகவல் 

 

தனது தொடர்ச்சியான படப்பிடிப்புகள் மற்றும் அடுத்தடுத்து பல்வேறு மொழிகளில் பணியாற்றுவதால் ஏற்படும் கடுமையான பணிச்சுமை காரணமாக, தம்மால் ஒரு நாளைக்குச் சராசரியாக 4 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியது: தினமும் 4 மணி நேரம்தான் தூங்குகிறேன். இது எனது மருத்துவருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா வாழ்க்கையின் இந்த அசுர வேக ஓட்டத்தினால், எனது 14 வயது தங்கையின் பிறந்தநாள் உள்ளிட்ட பல முக்கியமான குடும்பத் தருணங்களையும், விசேஷங்களையும் நான் தவறவிடுகிறேன்.

தற்போது வேலைகளுக்கு நடுவிலும் எனது தனிப்பட்ட வாழ்விற்கான எல்லைகளை வகுக்கத் தொடங்கியுள்ளேன். எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் எனது பெற்றோருடன் 20 நிமிடங்கள் பேசுவது, ஜிம்மில் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, மற்றும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது போன்றவற்றைத் தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்த பிறகு, அவருடன் நேரம் செலவழிக்கவும் வழியில்லை. அவரும் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கிறார். இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.