☰
×

"அந்த நிகழ்வு என்னை மோசமாக பாதித்து, நான் அழுதுவிட்டேன்".-ராஷ்மிகா தகவல் 

 

ராஷ்மிகா ‘கீதா கோவிந்தம்’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது நான் ஒரு பாடலை சத்தமாக கேட்டதற்கு விஜய் என்னிடம் கோபப்பட்டு கத்திவிட்டார். இந்தத் துறை எனக்கு புதிது என்பதால் அந்த நிகழ்வு என்னை மோசமாக பாதித்து, நான் அழுதுவிட்டேன். ஆனால் நாட்கள் கடந்தபின் அவரை பற்றி புரிந்துக் கொண்டு, நண்பர்களாகி விட்டோம். அவருடன் நடிக்கும்போது எனக்கு எந்தப் பயமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் சக நடிகர்களுக்கு முழு சுதந்திரமும், வசதியான சூழலையும் அமைத்துக் கொடுப்பார்.

நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய படங்களின் படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு சிறப்பானதாக மாற்றலாம் என்று எப்போதும் விவாதித்துக் கொண்டே இருப்போம். திரைக்கு அப்பாலும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதலும், வலுவான நட்பும் உருவாக அதுவே முக்கியக் காரணமாக அமைந்தது” என்று பகிர்ந்திருக்கிறார்.