×

தங்கலான் ஆரத்தி ரோலில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு முன் தேர்வான பிரபல நடிகை யார் தெரியுமா?

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘தங்கலான்’.‘KGF’-ல் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 திரையரங்குகளில் வெளியானது.திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.  வரவேற்பை பெற்று வரும் தங்கலான் முதல் நாள் இந்தியாவில் மட்டும் 12.6 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழில் மட்டும் 11 கோடி வசூல் செய்துள்ளது ‘தங்கலான்’ படம்.

இந்த நிலையில், தங்கலான் படத்தில் ஆரத்தி கதாபாத்திரம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மாளவிகா மோகனன் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார் என்றே கூறலாம். ஆரத்தி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் பா ரஞ்சித் முதலில் ரஷ்மிகா மந்தனாவை தான் அணுகியிருக்கிறார், ஆனால் அதன் பிறகு டேட் ஒதுக்குவதில் சிக்கல் இருந்ததால் ரஷ்மிகா படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. ஆரத்தி கதாபாத்திரத்தில் ரஷ்மிகா நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக  நடிகை மாளவிகா மோகனனை பா ரஞ்சித் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.