×

 காதல் திருமணம் செய்த பிறகு ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் படம்  

 
கதையின் நாயகி யாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற படம், கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியாகி, பாக்ஸ் ஆபீசில் தோல்வியை சந்தித்தது. தற்போது இந்தியில் ‘காக்டெய்ல் 2’, தெலுங்கில் ‘மைசா’, ‘ரணபாலி’ ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இதில், ஷாகித் கபூருடன் இணைந்து நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ படத்தின் டீசர் வெளியாகிறது. மேலும், வரும் ஜூன் 19ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்த பிறகு ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்