கடும் எதிர்ப்பால் ‘சாவா’ படத்தில் ராஷ்மிகா பட பாடல் காட்சி நீக்கம் 

 
rashmika

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கைக் கதையிலிருந்து உருவாகியுள்ள இந்திப் படம், ‘சாவா’. இதில் விக்கி கவுசல் நாயகனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, நாயகி. அக்‌ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா என பலர் நடித்துள்ளனர். லக்‌ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிப்.14-ல் படம் வெளியாக இருக்கிறது. <a href=https://youtube.com/embed/77vRyWNqZjM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/77vRyWNqZjM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லரில், மகாராஷ்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமான 'லெஜிம்' இசைக் கருவியை வாசித்தபடி விக்கி கவுசலும் ராஷ்மிகா மந்தனாவும் நடனமாடுகிறார்கள். இந்தக் காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

சத்ரபதி சிவாஜியின் பரம்பரையை சேர்ந்த சம்பாஜி ராஜேவும் கடும் அதிருப்தி தெரிவித்தார். ‘லெஜிம்’ வாசிப்பதைக் காட்டுவது சரி, ஆனால் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் நடனமாடுவதாகக் காட்டுவது தவறு என்றார். திரைப்படங்களில் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள வரம்புகள் உள்ளன என்றும் தெரிவித்தார். 

மகாராஷ்டிர அமைச்சர் உதய் சமந்த், “இந்த படத்தை முதலில் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்டாமல் வெளியிடக்கூடாது. மகாராஜின் கவுரவத்துக்குத் தீங்கு விக்கும் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்த படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மன் உடேகர், “லெஜிம் நடனம் சத்ரபதி சம்பாஜி மகாராஜை விட பெரியதல்ல, அதனால் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.