×

உதயநிதி படத்தில் இணைந்த ‘ராட்சசன்’ வில்லன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள்!

உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் இரு பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் வேலைகளை முடித்துள்ள உதயநிதி தற்போது முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையில் சினிமாவிலும் மீண்டும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். உதயநிதி தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் பாலிவுட்டில் ஹிட் ஆன ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சிவாங்கி இந்தப் படத்தின் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பிக்பாஸ்
 

உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் இரு பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வேலைகளை முடித்துள்ள உதயநிதி தற்போது முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையில் சினிமாவிலும் மீண்டும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.

உதயநிதி தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் பாலிவுட்டில் ஹிட் ஆன ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சிவாங்கி இந்தப் படத்தின் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் கூட இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடித்த கிறிஸ்டோபர் சரவணனும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.