×

ரத்தம் படத்தின் முன்னோட்டம் ரிலீஸ்

 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ரத்தம் படத்தின் முன்னோட்டம் வெளியானது.

சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதினார். இவரது இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ரத்தம் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ரத்தம் பட முன்னோட்டத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. 

<a href=https://youtube.com/embed/_zARWeIBSRY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/_zARWeIBSRY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

'ரத்தம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.