×

தள்ளிப்போகும் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ – புதிய தேதியை அறிவித்த படக்குழு.

 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி  மாற்றப்பட்டுள்ளது.

இன்பினிட்டி ஃப்லிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘தமிழ் படம்’,’தமிழ் படம்2’ மூலமாக சினிமாவை கலாய்த்த சி.எஸ் அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. அரசியல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி படம் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. நேற்றைய தினம் வெளியான டிரைலர் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.