×

சால்ட் பெப்பர் லுக்கில் ரவி... சைரன் படத்திலிருந்து புதிய வீடியோ வெளியீடு...

 

ஜெயம்ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு சைரன் திரைப்படத்திலிருந்து புதிய காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படம், 'சைரன்'. இதை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடிக்கின்றனர். யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு செல்வகுமார் எஸ்.கே.ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு அடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் ஜெயம்ரவியின் சால்ட் பெப்பர் தோற்றத்திற்காக இயக்குநர் ஒன்றை வருடம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயம்ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு, சைரன் திரைப்படத்திலிருந்து புதிய காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. 

விரைவில் சைரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.