சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ -யார் தெரியுமா ?
நடிகர் ரவி மோகன் ஜெயம் ரவி என்ற பெயரில் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இவர் நடித்த ஜெயம் படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது .இப்போது அவர் தன் பெயரை ரவி மோகன் என மாற்றி கொண்டு பல படங்களை தயாரித்தும் நடித்தும் இயக்கியும் வருகிறார் .
நடிகர் ரவிமோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே நடிக்கஉள்ளார். இரண்டாவதாக யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி தயாரிக்கிறார்.
அந்தவகையில், "பராசக்தி" பட இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் ரவிமோகனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தைத் தேடுங்கள், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200 சதவீதம் ஈடுபடுவதைக் காண்பீர்கள்! என் அழகான ஜென்டில்மேன் நடிகரே, உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது"என்று பதிவிட்டுள்ளார்