×

நடிகர் ஆகிறார் முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீஜார் இயக்க லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து வருகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மனோபாலா யோகி பாபு என ஏராளமானோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.இப்படத்தை தயாரிக்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், கொலை நோக்கு பார்வை, சுட்ட கதை, நலனும் நந்தினியும், நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட
 

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

இப்படத்தை இயக்குனர் ஸ்ரீஜார் இயக்க லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து வருகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மனோபாலா யோகி பாபு என ஏராளமானோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.இப்படத்தை தயாரிக்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், கொலை நோக்கு பார்வை, சுட்ட கதை, நலனும் நந்தினியும், நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

படங்கள் தயாரிப்பு மூலம் பிரபலமானதைவிட ரவீந்திரன் சந்திரசேகரன், வனிதா திருமணம் விஷயத்தில் பேட்டி கொடுத்ததில் தான் அதிகம் பிரபலம் ஆனார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்நிலையில் தற்போது அவர் தயாரிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் பட தயாரிப்பில் இருந்து நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.