பல வருடங்களுக்கு பின்னர் வெளியில் வந்த பாக்யராஜ் மகள் -ஏன் தெரியுமா ?
Jan 29, 2026, 07:00 IST
இயக்குனர் கே.பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ், தமிழில் பாரிஜாதம் உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். சில காலமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதனையடுத்து தனக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை பார்த்துக்கொள்வது கடினம் என்றும் கூறி பேட்டிக் கொடுத்தார். தற்போது ஆடை அணிகலன்கள் தொடர்பான ஆன்லைன் ஷாப்பிங் பணியை செய்து வருகிறார். தற்போது சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சரண்யா. பல ஆண்டுகளாக வெளியில் வராத சரண்யா, இடையில் சில படங்களுக்கு ஆடைவடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 18 ஆண்டுகள் கழித்து அவர் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை நெட்டிசன்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.