×

‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்த இளம் நடிகை!...

 

மகிழ்திருமேனி- அஜித் கூட்டணியில் தயாராகிவரும் விடாமுயற்சி படத்தில் நடிக்க இளம் நடிகை ரெஜினா கசான்ட்ரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் ஷூட்டிங்  குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ள நிலையில் தற்போது அந்த படத்தில் இணைந்துள்ள இளம் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளது கிடதட்ட உறுதியான நிலையில், இரண்டாவதாக நடிகை ரெஜினா கசான்ட்ரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியும்.