×

விடுதலை 2 படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

 

வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்கியிருந்த திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மக்களுக்கான போராடுகிற பெருமாள் வாத்தியரை உயிரோடவோ, பிணமாகவோ பிடிக்க போலீஸ் நடத்துற ஆபரேஷன் தான் விடுதலை. இருபாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னரே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் ‘விடுதலை’ இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் தான் இரண்டாம் பாகம் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.