×

மீண்டும் திரைக்கு வரும் பாகுபலி - புதுமையான முறையில் வெளியிட திட்டம் 

 
கடந்த 2015ல் பாகுபலி படத்தில் முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்தது .
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர்.
இப்படம் அமரேந்திர பாகுபலி என்ற கதாபாத்திரத்தின் கதையை மையமாகக் கொண்டுள்ளது, இவர் மகேந்திர பாகுபலி என்ற பெயருடன் அவரது தாயால் வளர்க்கப்படுகிறார்.
இத்திரைப்படம், மகேந்திர பாகுபலி தனது தந்தையின் மரணத்திற்கு நீதி தேடுவதையும், மஹிஷ்மதி இராச்சியத்தின் அரியணையை மீட்டெடுப்பதையும் விவரிக்கிறது.
இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி.
பாகுபலி படத்தின் ஒளிப்பதிவை கே.கே.செந்தில் குமார் செய்துள்ளார். 
இப்படம் தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ‘பாகுபாலி’ படத்தை ரிரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது