உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்த ‘ரெட்ரோ’.. அதிகாரபூர்வ அறிவிப்பு...!
May 6, 2025, 18:24 IST
சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் பாடல்கள் திரையரங்குகளில் தெறிக்க விடுகின்றன.