ரெட்ரோ படத்தின் Love Detox பாடல் வீடியோ ரிலீஸ்...
May 8, 2025, 18:50 IST
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் Love Detox பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ மாறியுள்ளது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் Love Detox பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் நடிகை ஷ்ரேயா சரண் நடனமானடியுள்ளது குறிப்பிடத்தக்கது.