ஸ்ரீசக்தி தியேட்டரில் மகளிருக்கான பிரத்யேகமாக ‘ரெட்ரோ’ காட்சி.. பெண்கள் உற்சாகம்...
May 1, 2025, 14:49 IST
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்திற்கு ஸ்ரீசக்தி தியேட்டரில் மகளிருக்கான பிரத்யேகமாக காட்சி திரையிடப்பட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் 'ரெட்ரோ'. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜ ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.