"இலங்கை தமிழராக சசிகுமார் வாழ்ந்துள்ளார்" -ஃ பிரீடம் படம் பற்றிய விமர்சனம்
நடிகர் சசிகுமார் சமீபத்தில் நந்தன் ,அயோத்தி மற்றும் டூரிஸ்ட் பேமிலி போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் .அதிலும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் இலங்கை தமிழராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் .அந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வசூலை குவித்து பெரும் வெற்றி படமாக அமைந்தது .அந்த படத்தில் சசிகுமார் ஏற்று நடித்த இலங்கை தமிழர் வேடத்தையே அவர் இப்போது வெளியாகியுள்ள பிரீடம் படத்திலும் ஏற்று நடித்துள்ளார் .இந்த பிரீடம் படம் பற்றி படம் பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .அது பற்றி பார்க்கலாம்
இலங்கை தமிழர்களின் வலியை, அவர்கள் உணர்வை தொடர்ச்சியாக சொல்லி வருகிறார் சசிகுமார். ஃபிரீடம் 1996ல் வேலூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை. வேலூர் கோட்டையில் அவர்கள் பட்ட அடி, படம் பார்ப்பவர்கள் மனதை கலங்க வைக்கிறது. நான் கர்ணன் அல்ல, நீங்கதான் என சசிகுமாரை நோக்கி சொல்லப்படும் வசனம் செம. இவர்கள் தப்பிக்க வேண்டும். போலீசில் சிக்கவிடக்கூடாது என பார்வையாளர்களுக்கு ஏற்படும் தவிப்பு, படத்தின் பலம். நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, இயக்கம் அருமை. வேலூர் கோட்டையில் இருந்து தப்பிக்க சுரங்கம் தோண்டும் காட்சிகள், அதில் ஊர்ந்து செல்லும் காட்சிகள் மாஸ். ஆங்கில படம் பார்த்த மாதிரி இருக்கிறது. சசிகுமார் கதை தேர்வு, பாத்திர படைப்பு சூப்பர். லிஜோமோல் பாதிக்கப்பட்ட பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் என படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.