×

நிறைய காமெடியன்கள் நடித்த படம் -தேசிங்கு ராஜா 2 விமர்சனம்

 
கடந்த 2013ம் ஆண்டு விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா படம் ரிலீஸ் ஆகி ,படம் சக்கை போடு போட்டது .இப்படத்தை டைரக்டர் எழில் இயக்கியிருந்தார் ,இந்நிலையில் அவரே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 12 வருடம் கழித்து இயக்கி வெளியிட்டுள்ளார் 
தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இப்படத்தை பி ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். செல்வா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆனந்த் லிங்க குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். கலை இயக்குனராக சிவ சங்கர் பணியாற்றி இருக்கும் இப்படம் ஜூலை 11ந் தேதி திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தினை பார்த்த நெட்டிசன்களின் விமர்சனத்தை பற்றி இப்பதிவில் நாம் காணலாம் 
தேசிங்கு ராஜா படத்தில் நிறைய காமெடியன்கள் இருந்தாலும் காமெடி குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார் படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த நெட்டிசன் ஒருவர்.இன்னொருவர் தேசிங்கு ராஜா 2 திரைப்படம் 100 சதவீதம் காமெடி  என பதிவிட்டிருக்கிறார். அதேபோல் மற்றொருவர், நெத்தியடி காமெடி போல உள்ளது என விமர்சித்துள்ளார். ஒரு சிலரோ காமெடிக்கு கேரண்டி  என பதிவிட்டு வருகிறார்கள். இதன்மூலம் தேசிங்கு ராஜா 2 முதல் பாகம் அளவுக்கு இருக்குமா  என்பது போக போக தெரியும் . பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எந்த அளவுக்கு சோபிக்கிறது என்பதைப் பொருத்து தான் அதன் ரிசல்ட் இருக்கும்.