×

தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் - சிவகார்த்திகேயன் இரங்கல்

 

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயனும் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.