‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ரிஷப் ஷெட்டி?
Oct 20, 2024, 19:05 IST
தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், சமுத்திரக்கனி, வினய் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம், ‘ஹனு- மான்’. பிரசாந்த் வர்மா இயக்கிய இந்தப் படம், பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த பாகம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஜெய் ஹனுமான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டி நடிக்க இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.இதற்கிடையே பிரசாந்த் வர்மா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கி வருகிறார். ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா’ படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார்.