சூர்யா 45 படத்தில் வக்கீலாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி..?
Mar 7, 2025, 13:35 IST
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி வழக்கறிஞராக நடிப்பது தெரியவந்துள்ளது.
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடந்த முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.