×

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்கவாசல்’ படத்தின் மிரட்டல் டீசர் ரிலீஸ் !

 

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா, அஸ்வின் ஆகியோர் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார். கடந்த 19-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் தொடங்கியதும் வாயில் பிளேடுடன் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னணியில் கருணாஸ் குரலில் பைபிள் வாசகங்கள் ஒலிக்க, ஒவ்வொரு கதாபாத்திரமாக தங்களது குணநலன்களை வெளிப்படுத்துகின்றனர். மொத்தக் கதையும் சிறைக்குள்ளேயே நடப்பதாக தெரிகிறது. போதைப்பொருட்கள் புழக்கம், ரத்தம், அடிதடி என காட்சிகள் மிரட்டுகின்றன. <a href=https://youtube.com/embed/JXgWmuiOLbo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/JXgWmuiOLbo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

மோசமானவர்கள குழுமியிருக்கும் சிறையில் இறுதியில் வந்து சேர்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த டீசரின் சம்பவமே செல்வராகவனின் மிரட்டலான சர்ப்ரைஸ் தான். எந்தவித ஆர்பாட்டமில்லாத ஆர்.ஜே.பாலாஜியின் முக பாவனைகளை பார்ப்பது முதன்முறை. டீசருக்கு உயிர் கொடுக்கிறது பின்னணி இசை. கச்சிதமாக வெட்டப்பட்டுள்ள டீசரின் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.