×

உடல்நலம் தேறியதும் கமலை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற ரோபோ சங்கர்

 

நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர், தற்போது உடல் நலம் தேறி வருகிறார். அண்மையில் பார்ட்னர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அண்மையில், உலகநாயகன் கமல்ஹாசன், ரோபோ சங்கர் உடல்நிலை பற்றி தொலைபேசி மூலமாக விசாரித்தார். அப்போது, ரோபோவிடம் கமல் ஜாக்கிரதையா இருங்க, வேளைக்கு சரியாக சாப்பிடுங்க, மாத்திரை எடுத்துக்கோங்க என்று கூறினார்.