×

‘ஏகே 62’ படத்திலிருந்து விலகிய 'ராக்ஸ்டார் அனிரூத்' -  அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்.

 

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அஜித்தின் 62வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்க,லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்திய தகவல் இந்த கூட்டணி இல்லை, படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக வெளியானது. மகிழ் திருமேனி இதற்கு முன்னதாக தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  நிலைமை இப்படியிருக்க படத்தின் இசையமைப்பாளராக கமிட்டான அனிரூத்தும் படத்திலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் குமார் படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிரூத் விலகியதாக தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், அனிருத்துக்கு பதிலாக தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண் ராஜ் ஏகே 62ல் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 220 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது.  அதேநேரம் ‘ஏகே 63’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.