×

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ விநியோக உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்! 

 

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் தமிழகம், கேரளா, கர்நாடக விநியோக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான காட்சிகள் அனைத்தையும் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு முன்னதாக சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தினை அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டாலும், ’விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால் அது சாத்தியமில்லை என்பது உறுதியாகிவிட்டது.

 
தற்போது ‘குட் பேக் அக்லி’ படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருக்கிறார். தமிழகம் மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடகா விநியோக உரிமையையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களில் தயாரிப்பில் பணிபுரிந்தவர் ராகுல். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வெற்றி கண்டவர் ராகுல் என்பது நினைவுக் கூரத்தக்கது.