×

தனுஷின் 'குபேரா' பட விநியோக உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்!
 

 

தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், தனுஷின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டதுய. இப்படத்தில் தனுஷ்,  தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், குபேரா படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.