ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). இப்படம் பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது.
சுதந்திரதிற்கு முந்தைய காலகட்டத்தில் ராம் மற்றும் கோமரம் பீம் என்ற இரு நண்பர்களின் கற்பனை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் இப்படத்தின் இசையமைப்பாளர் கீராவணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் ராஜமௌலி உலக அளவில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 'RRR behind and beyond' என்ற தலைப்பில் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட அளவிலான திரையரங்குகளில் இப்படத்தின் மேக்கின் வீடியோ பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்ட நிலையில், இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அந்த மேக்கிங் வீடியோவில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து இயக்குநர் ராஜமௌலி விளக்குகிறார். ஆர்.ஆர்.ஆர் மேக்கிங் வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து ராஜமௌலி மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பல ஹாலிவுட் பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.