×

‘பகை முடி’ பாடல் உருவானது எப்படி ?... ‘ருத்ரன்’ செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியீடு !

 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பகை முடி’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

மிரட்டலான கதைக்களத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’. பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாடலான ‘பகை முடி’ பாடல் உருவாகும் விதம் குறித்து ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் மிரட்டலாக உருவாகியுள்ள இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

<a href=https://youtube.com/embed/KwMThEkeK9w?autoplay=1&mute=1&start=16><img src=https://img.youtube.com/vi/KwMThEkeK9w/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">