×

"ஒரு நடிகையாக இருப்பதன் சிறப்பு என்ன?" -காந்தாரா நடிகை விளக்கம் 

 

சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வரும் காந்தாரா சாப்டர் 1 படம் அனைவருக்கும் பிடித்த படம் .இந்த படம் பல மொழிகளிலும் வெளியாகி வசூல் மழை பொழிந்து வருகிறது .இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 ஹீரோயின் ருக்மணி வசந்த் பேட்டி பற்றி நாம் காணலாம் .
காந்தாரா சாப்டர் 1 படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும் நிலையில், நடிகை ருக்மிணி வசந்த், படத்தில் நடித்தது குறித்து பேசினார். படத்தில் கனகவதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை முயற்சித்ததாகப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘ ஒரு நடிகையாக இருப்பதன் சிறப்பே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான். உண்மையைச் சொன்னால், கனகவதி என்னைப் போன்றவள் அல்ல’ என்றார்.
ருக்மிணி வசந்த் அடுத்து டாக்ஸிக் படத்தில் நடிகர் யாஷுடனும், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை