×

‘கொரோனா இரண்டாம் அலை’ என்று வதந்தி பரப்புகிறார்… ஞானவேல்ராஜாவை வெளுத்து வாங்கிய திரையரங்க உரிமையாளர்.!?

கிறிஸ்துமஸ் 25 அன்று ஜாக்கிஜான் படம் உட்பட ஐந்து படங்கள் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான காட்டேரி படத்தை நாளை வெளியிட மாட்டோம் என்று ஒரு அறிக்கையைத் தட்டிவிட்டிருக்கிறார். ரிலீஸ் தேதியை தள்ளிப் போடுவதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் – இந்தப் படம் பல தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது. அது முறையாக வெளியாகி மக்களிடம் போய்ச் சேர வேண்டும். ஆனால், தற்போது கொரோனா இரண்டாவது அலை உருவாகும்
 

கிறிஸ்துமஸ் 25 அன்று ஜாக்கிஜான் படம் உட்பட ஐந்து படங்கள் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான காட்டேரி படத்தை நாளை வெளியிட மாட்டோம் என்று ஒரு அறிக்கையைத் தட்டிவிட்டிருக்கிறார்.

ரிலீஸ் தேதியை தள்ளிப் போடுவதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் – இந்தப் படம் பல தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது. அது முறையாக வெளியாகி மக்களிடம் போய்ச் சேர வேண்டும். ஆனால், தற்போது கொரோனா இரண்டாவது அலை உருவாகும் சூழல் இருப்பதால் இப்போது ரிலீஸ் பண்ணுவது சரியாக இருக்காது என்று சொல்லியிருக்கிறார்.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திருப்பூர் சுப்ரமணியன். ஞானவேல் ராஜாவுக்கு இந்தப்படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்லிட்டுப் போக வேண்டியது தானே.!? ‘கொரோனா இரண்டாம் அலை பரவுது… அதனால தான் ரிலீஸ் பண்ணலேன்னு எப்படிச் சொல்லலாம்.? மத்திய மாநில அரசுகளே நம்ம நாட்டில் இரண்டாம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொன்ன பிறகு ஞானவேல் ராஜா இப்படிச் சொல்லுவது பொது மக்களை தேவையில்லாமல் பீதிக்குள்ளாக்காதா..! என்று கேட்டவர் இன்னொரு தகவலையும் சொல்லியிருக்கிறார்.

நேற்றைய தினம் வெளியான ‘வொண்டர் வுமன்’ படத்துக்கு கூட்டம் கட்டியெறியிருக்கிறதாம். அப்படியிருக்க இந்த மாதியெல்லாம் வதந்தி கிளப்பி தியேட்டர்காரங்க பொழப்புல மண்ணள்ளிப் போடலாமா என்று கேட்டிருக்கிறார். நாளை வெளியாக விருக்கிற ஜாக்கிஜான் படத்துக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை… அதுக்காகக்கூட ஞானவேல் ராஜா தள்ளி வச்சிருக்கலாம். இப்படியா வதந்தி கெளப்புறது.!?