×

‘கலைத்தாயின் இளையமகன் நீர்’… ‘வீர தீர சூரன்’ இயக்குனரைப் பாராட்டிய எஸ் ஜே சூர்யா!

 

நடிகர் விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கடுத்து விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பற்றி நடிகர் எஸ் ஜே சூர்யா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதில் “வீர தீர சூரன் படத்தில் நான், விக்ரம் மற்றும் சுராஜ் ஆகியோர் பங்குபெறும் கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த காட்சியை தன்னுடைய குழுவினரோடு சேர்ந்து இயக்குனர் 10 நாட்கள் ஒத்திகை பார்த்தார். அப்புறம் எங்களை வைத்தே மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தார். அதன் பின்னர் நேற்று காலை அந்த காட்சியை படமாக்கி முடித்தார். அவரைப் பற்றி ஒன்று சொல்லவேண்டுமென்றால் ‘கலைத்தாயின் இளைய மகன் அய்யா நீர்” என இயக்குனர் அருண் குமாரை எஸ் ஜே சூர்யா பாராட்டியுள்ளார்.