'சச்சின்' ரீ ரிலீஸ்.. உற்சாகமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை ஜெனிலியா..!
Apr 24, 2025, 12:37 IST
விஜய், ஜெனிலியா நடிப்பில் உருவான 'சச்சின்' திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ள நிலையில், நடிகை ஜெனிலியா ரசிகர்களுக்கு உற்சாகமாக நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய், ஜெனிலியா நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருந்திருந்தது. பாடல்களும் இன்றளவும் முணுமுணுக்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்ததால் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் ஹவுஸ் புள் காட்சிகளாக சச்சின் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.