ரீ-ரிலீஸ் ஆகும் 'சச்சின்'... ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு...!
Apr 13, 2025, 18:40 IST
விஜய் நடித்துள்ள சச்சின் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு”, ’ஆளவந்தான்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்’, தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில் விஜய்யின் 'கில்லி' படமும் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த 'சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வந்தன.