சாய் அபயங்கரின் 3-வது Independent ஆல்பம்-ன் ப்ரோமோ வெளியீடு
Jan 29, 2025, 14:41 IST
கட்சி சேர, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3-வது Independent ஆல்பம்-ன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் பல 'இண்டிபெண்டண்ட் பாடல்கள்' வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சினிமா பாடல்கள் அல்லாது இதுப்போன்ற இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.அந்த வகையில் சாய் அபயங்கர் என்ற இளைஞன் கடந்தாண்டு தொடக்கத்தில் ’கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் ’ஆசை கூட’ என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.