சாய் தன்ஷிகா நடித்த ' யோகி டா' பட டிரெய்லர் ரிலீஸ்
May 25, 2025, 15:52 IST
நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள ' யோகி டா' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது.
யோகி டா படத்தை கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். படத்தை ஸ்ரீ மோனிகா சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சாய் தன்ஷிகாவுடன் சயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.