"சீதாவிடம் பிரார்த்தனை செய்தேன்"-ராமாயணாவில் நடித்தது பற்றி சாய் பல்லவி
நமித் மல்கோத்ராவின் பிரமாண்ட தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படம் ‘ராமாயணா’. .
தற்போது தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழுவினர் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சாய் பல்லவி பேசுகையில், ‘ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், அந்த கதாபாத்திரத்துக்கு வெறுப்பு கிடைக்கும் என்ற பொதுவான ஒரு எண்ணம் உள்ளது. ஆனால், யஷ் அந்த கேரக்டரில் நடித்து வெறுப்புக்கு பதிலாக அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார். சீதா தேவியாக ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடிக்க அவர் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று சீதாவிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த படத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் மிக துல்லியமாகவும், ஒரு நேரடி தமிழ் படத்திற்கு எப்படி இருக்குமோ அதே போன்ற நளினத்துடனும் நேர்த்தியாக அமைந்துள்ளது.