×

படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த சாய் பல்லவி

 

‘SK21’ படத்திற்காக காஷ்மீர் சென்றுள்ள நடிகை சாய் பல்லவி அங்குள்ள அழகிய இடங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக தமிழில் அவர் நடித்த ‘கார்கி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான ‘விராட பருவம்’ நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது தமிழில் தேசிங்கு பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் ‘SK21’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாய்பல்லவி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகின்றன.