☰
×

சாய் பல்லவியிடம் கோபித்துக்கொண்ட அவரின் தாயார் -எதனால் தெரியுமா ?

 

பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, “ஓம்  படத்துக்காக என் தலைமுடியை வெட்டியதற்காக என் அம்மா என்னிடம் பல நாட்கள் பேசவே இல்லை.
என் அப்பாதான் என் அம்மாவை சமாதானப்படுத்தினார். முடியை வெட்டிய பிறகு, என் தாய்க்கு வீடியோ கால் செய்தேன்; அவர் அதிர்ச்சியடைந்து போனை கட் செய்தார். என் தந்தை அது விக் தானே என்று கேட்டார். நான் உண்மையில் முடியைத்தான் வெட்டியிருக்கிறேன் என்று சொன்னதும் அவர் என் அம்மாவை சமாதானப்படுத்தினார்.
பொதுவாக, வேறு இயக்குனராக இருந்திருந்தால் நான் என் முடியை வெட்டியிருக்க மாட்டேன். கேரக்டருக்காகவும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்காக நான் என் முடியை வெட்டிக்கொண்டேன். இல்லையென்றால் இதுபோன்ற செயலை நான் எதற்காகவும், யாருக்காகவும் செய்திருக்க மாட்டேன்” என்று பேசியிருக்கிறார்.