×

பொன் நிறத்தில் ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்... வைரல் புகைப்படங்கள் ! 

 

நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்ந்து போட்டோஷூட் வெளியீட்டே ரசிகர்களிடையே பிரபலமாகி வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால், தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்த படத்தை அடுத்து புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இதுதவிர பெயர் வைக்காத சில திரைப்படங்களிலும் சாக்ஷி நடித்து வருகிறார். 

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சக்ஷி அகர்வால், தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தங்க நிற சேலையில் ஜொலிக்கும் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.