×

 'சக்தி திருமகன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 

அருண் பிரபு எழுத்து, இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சத்தித் திருமகன்’.சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘வாழ்க்கை என்பது தனக்காக வாழ்வது மட்டுமல்ல; சக மனிதர்களுக்காக வாழ்வதும்தான்’ என்கிற மக்கள் நல அரசியல் தத்துவ விதையைப் பால்யத்தில் மனதில் ஏந்திக்கொள்ளும் ஒருவன், வெளியுலகத்துக்குத் தெரியாமலே பல ஆயிரம் மக்களுக்குப் பலன் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத பெரிய விருச்சமாக வளர்ந்து நிற்பதும் அதை மோப்பம் பிடிக்கும் அதிகார வர்க்கம் ஒட்டுமொத்தமாக அவனை நோக்கித் திரும்பும்போது அவன் என்ன செய்தான் என்பதுதான் கதை.

விஜய் ஆன்டனி, தன் வழக்கமான நடிப்பில் இருந்து கொஞ்சம் மெருகேறி இந்த படத்தில் வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் போக வாகை சந்திரசேகர், சுனில் கிரிபாலனி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கீரண், ரினி, ரியா ரிது மற்றும் மாஸ்டர் கேஷவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விமர்சகர்கள் பெரும்பாலும் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனமே கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வரும் அக்டோபர் 24 முதல் ‘சக்தி திருமகன்’ Jio Hotstar ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.