×

 'சாலா' திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட அல்லு அர்ஜுன்...

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, 'சாலா' எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து 'சாலா' டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்  இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 'சாலா' வெளியாகிறது.