×

திறப்பு விழாவிற்கு போன சமந்தா -அடுத்து என்னாச்சி தெரியுமா ?

 
ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தாவை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை சமந்தா, கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அங்கு அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர். மேலும் சிலர் சமந்தாவுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். அப்போது ரசிகர்களின் கூட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார். அங்கிருந்து அவர் புறப்பட தயாரானபோது, ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரை மணி நேரம் அவர் கூட்டத்தில் சிக்கியபடி தள்ளாடினார். கடும் போராட்டத்துக்கு பின்னர் சமந்தாவை பாதுகாவர்கள் மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது.