ஒரே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் முன்னணி ஹீரோயின் -யார் தெரியுமா?
நடிகை சமந்தா புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார் .இந்த பாடல் பயங்கர ஹிட் ஆனது .அந்த படத்த்தின் வெற்றிக்கு இந்த டான்சும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது .இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் காணலாம்
மீண்டும் சமந்தா கவர்ச்சி நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ்குமார், ஜான்வி கபூர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘பெத்தி’ என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் சமந்தா நடனமாடுவதாக சொல்லப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அப்பாடல் காட்சிக்கு ராம் சரணுடன் இணைந்து சமந்தா நடனமாட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால், ‘பெத்தி’ படத்தை பற்றிய பரபரப்பு அதிகரித்துள்ளது. 2018ல் வெளியான ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அதற்கு பிறகு 7 வருடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் இணையும் படமாக ‘பெத்தி’ அமைந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் முடிவு தெரியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது.