×

மயோசிடிஸ் அமைப்பின் தூதரானார் நடிகை சமந்தா... இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு !

 

மயோசிடிஸ் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மிகவும் பிசியான நடிகையாக இருக்கும் அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'குஷி'. காதல் ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. சமந்தாவுடன் இணைந்து விஜய் தேவரகொண்டாவும் இந்த படத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே 'யசோதா' படத்தின் போது நடிகை சமந்தாவிற்கு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சினிமாவிற்கு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்றார். இதையடுத்து 'குஷி' படத்தை முழுவதுமாக முடித்த அவர், தற்போது சினிமாவிற்கு ஒரு வருடத்திற்கு லீடு விட்டிருக்கிறார். 

இதைத்தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள அவர், மயோசிடிற்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொறுப்பு சமந்தாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.